📖 தமிழ் வகுப்புகள்
பெல்ஜியம் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு அரசு சார்ந்த தமிழ் இணையக் கல்விக்கழகம் (Tamil Virtual Academy – TVA) உடன் இணைந்து, ஆன்லைன் முறையில் தமிழ் வகுப்புகளை நடத்துகிறது. இந்த வகுப்புகள் அனைத்தும் TVA வழங்கும் தகுதி பெற்ற ஆசிரியர்களால் நடத்தப்படும்.
✔ TVA அங்கீகாரம்
✔ தகுதி பெற்ற ஆசிரியர்கள்
✔ ஆன்லைன் வகுப்புகள்
✔ அரசு சான்றிதழ்
🎯 எங்கள் நோக்கம்
தமிழ்நாடு அரசு சார்ந்த TVA உடன் இணைந்து, 5 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தமிழ் மொழிக் கல்வியை எளிதாகவும் தரமாகவும் வழங்குதல்
-
📚 சான்றிதழ்க் கல்வி – தமிழ் பாடநிலைகள்
-
👩🏫 ஆசிரியர் பட்டயப் பயிற்சி
-
🎶 மரபுவழிப் பண்ணிசைப் பயிற்சி
📚 சான்றிதழ்க் கல்வி – தமிழ் பாடநிலைகள்
சான்றிதழ்க் கல்விக்கான அனைத்துப் பாடங்களும் இணையவழிப் பல்லூடக வசதிகளைப் பயன்படுத்திக் கற்பதற்கு எளிய, முறையில், ஆர்வம் ஊட்டும் வகையில் வழங்கப்படுகின்றன. தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் வழங்கப்பட்டு வரும் பாடத்திட்டங்கள் பிற மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் இணையம் வழியாக தமிழ் கற்பதற்கு ஏதுவான பாடத்திட்டம் எனப் பள்ளிக் கல்வித் (கஆப) துறை அரசாணை (ப) எண்.254, நாள்.27.12.2024இல் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து நிலைகளில் தமிழ் பாடத்தை நாங்கள் வழங்குகிறோம்.
-
Level 1 – அகரம் (1 & 2 ஆம் வகுப்புக்கு நிகரானது)
-
Level 2 – இகரம் (3, 4 & 5 ஆம் வகுப்புக்கு நிகரானது)
-
Level 3 – உகரம் (6, 7 & 8 ஆம் வகுப்புக்கு நிகரானது)
-
Level 4 – ழகரம் (9 & 10 ஆம் வகுப்புக்கு நிகரானது)
-
Level 5 – சிகரம் (11 & 12 ஆம் வகுப்புக்கு நிகரானது)
🎓Level 1 – அகரம் (1 & 2 ஆம் வகுப்புக்கு நிகரானது)
எழுத்துகள் அறிமுகம், சொற்களைக் கற்றல், சிறு தொடர் கற்றல், எழுதும் பயிற்சி, மழலைப் பாடல்கள், அறநெறிக் கதைகள் ஆகியப் பாடப்பொருகள் இதில் அடங்கும்.
-
எழுத்துகள் அறிமுகம்
-
சொற்கள் கற்றல்
-
சிறுதொடர் கற்றல்
-
எழுதும் பயிற்சி
-
மழலைப் பாடல்கள்
-
அறநெறிக் கதைகள்
🎓Level 2 – இகரம் (3, 4 & 5 ஆம் வகுப்புக்கு நிகரானது)
சொல், பொருள், தொடர், இலக்கணம் ஆகிய மொழிக் கூறுகள்- கேட்டுக் கற்றல், படித்துக்கற்றல், பேசிக்கற்றல், எழுதிக்கற்றல் ஆகிய திறன்களை வளர்க்கும் வகையில் கீழ்க்காணும் 20 தலைப்புகளில் பாடங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அடிப்படைப் பாடங்களின் தொடர்ச்சியாகவும் மேல் நிலைப் பாடங்களுக்கான முன் தகுதியாகவும் இப்பாடங்கள் உருவமைக்கப்பட்டுள்ளன.
பாட உள்ளடக்கத்தின் சுருக்கம்:
-
சொல், பொருள், தொடர், இலக்கணம்
-
கேட்டல், படித்தல், பேசுதல், எழுதுதல்
-
20 தலைப்புகளில் பாடங்கள்
-
மேல்நிலைக்கு முன்தகுதி
🎓Level 3 – உகரம் (6, 7 & 8 ஆம் வகுப்புக்கு நிகரானது)
இந்நிலையில், தமிழ் மொழியின் சிறப்புகள், தமிழர் வாழ்வியல், மரபு, பண்பாடு, நாட்டுப்புறக் கலைகள், புகழ்பெற்ற தமிழறிஞர்கள் போன்ற செய்திகள் பாடப்பொருண்மைகளாக உள்ளடக்கப்பட்டுள்ளன.
இகரம் நிலை பாடங்களின் தொடர்ச்சியாகவும், ழகரம் நிலை பாடங்களுக்கான முன் தகுதியாகவும் இப்பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாட உள்ளடக்கத்தின் சுருக்கம்:
-
தமிழ் மொழி சிறப்புகள்
-
தமிழர் வாழ்வியல் & பண்பாடு
-
நாட்டுப்புறக் கலைகள்
-
புகழ்பெற்ற தமிழறிஞர்கள்
🎓Level 4 – ழகரம் (9 & 10 ஆம் வகுப்புக்கு நிகரானது)
தமிழரின் உயரிய சிந்தனை, உறவின் மேன்மை, சமூகப் பொறுப்பு முதலானவற்றை மாணவர்களுக்குக் கற்பிக்கும் நோக்கில் இப்பாடநூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, தமிழ் மொழியில் உள்ள தொடர் வகைகள், வல்லினம் மிகும் / மிகா இடங்கள் முதலான இலக்கணங்களை எளிமையாகக் கற்கும் வகையிலும், உகரம் நிலை பாடங்களுக்கான தொடர்ச்சியாகவும், சிகரம் நிலை பாடங்களுக்கான முன் தகுதியாகவும் இப்பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பாட உள்ளடக்கத்தின் சுருக்கம்:
-
தமிழ் மொழி சிறப்புகள்
-
தமிழர் வாழ்வியல் & பண்பாடு
-
நாட்டுப்புறக் கலைகள்
-
புகழ்பெற்ற தமிழறிஞர்கள்
🎓Level 5 – சிகரம் (11 & 12 ஆம் வகுப்புக்கு நிகரானது)
தமிழ் மொழியின் இலக்கண, இலக்கிய வளங்கள் எக்காலத்திற்கும் எவ்விடத்திற்கும் பொருந்தும். இத்தகைய பெருமை வாய்ந்த தமிழ் மொழியின் இலக்கிய கருத்துகள், இலக்கணக் கூறுகள் முதலானவற்றை பாடப்பொருண்மைகளாகக் கொண்டு சிகரம் நிலைக்கான பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களின் படைப்புகளைத் தமிழ் மொழியில் வெளியிட ஆர்வமூட்டும் வகையிலும் பயிற்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பாட உள்ளடக்கத்தின் சுருக்கம்:
-
இலக்கிய & இலக்கண வளங்கள்
-
படைப்பாற்றல் பயிற்சிகள்
-
மாணவர் படைப்புகள் வெளியீடு
👩🏫 ஆசிரியர் பட்டயப் பயிற்சி
ஆசிரியர் பட்டயப் பயிற்சி பாடத் திட்ட வகுப்புகளில் சேர விரும்புவோர் குறைந்தபட்சம் 10+2 (அல்லது) தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மேற்சான்றிதழ் நிலை 3 (அல்லது) தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சிகரம் நிலை (அல்லது) அதற்கு ஈடான கல்வி நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பட்டப் படிப்பில் சேருவதற்குரிய குறைந்தபட்ச வயது வரம்பு 17 என வரையறுக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்மொழி கற்றல்-கற்பித்தல்
-
அடிப்படைத் தமிழ் இலக்கணம்
-
தமிழில் படைப்பாக்கத் திறன்
-
செய்முறைப் பயிற்சிகள்
🎶 மரபுவழிப் பண்ணிசைப் பயிற்சி
தமிழிசை ஆர்வலர்களுக்காக பன்னிரு திருமுறைகளில் தேவாரம், திருவாசகம் பாடல்களை மரபுவழிப் பண்ணிசைப் பயிற்சியாக தேவாரப் பதிகங்களை பண்ணிசையோடு பொருளுணர்ந்து கற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பு, தகுதி வாய்ந்த ஓதுவார்களால் கற்றுத்தரப்படும் பயிற்சி, எளிய இணையவழி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இப்பயிற்சி இரண்டு நிலைகளில் நடத்தப்படும்.
அடிப்படை நிலை:
-
சமயக்குரவர் முதல் மூவர் அருளிய தேவாரப் பதிகங்கள்
-
மூவர் முதல்திருப்பதிகங்கள்
-
பொது பதிகங்கள், அற்புதப் பதிகங்கள், சிறப்புப் பதிகங்கள்
-
பஞ்சபுராணப் பாடல்கள்
மேல்நிலை:
-
சமயக்குரவர் நால்வர் அருளிய பதிகங்கள்
-
சிறப்பு & அற்புதப் பதிகங்கள்
-
திருவாசகம்
-
நால்வர் முத்திப் பதிகங்கள்
-
பன்னிரு திருமுறை பாராயணம்
முக்கிய குறிப்பு
✔ மேற்கூறிய படிப்புகளைப் பெற / சேர நீங்கள் பெல்ஜியம் தமிழ் சங்கத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும்
✔ குறைந்தபட்சம் 10 சேர்க்கைகள் கிடைத்தவுடன் புதிய தொகுதி / வகுப்பைத் தொடங்கலாம்
✔ வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்
✔ பாடத்திட்ட பாடத்திட்டம், கால அளவு, தேர்வு, மதிப்பீடு மற்றும் முடிவுகள் TVA-யால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி நடத்தப்படும்.
